விஷ்ணுவிஷால் - ஜூவாலா கட்டா நிச்சயதார்த்தமா?

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை ரஜினியை விவாகரத்து செய்த பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில மாதங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் இருவரும் தாங்கள் காதலிப்பதை ஒப்புக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு ஸ்பெஷல் மோதிரம் ஒன்றை விஷ்ணு விஷால் அணிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ’நாங்கள் இருவரும் ஒரு புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள போவதாகவும் தங்கள் அனைவருடைய ஆசியையும் எதிர்பார்ப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார் 

இதனால் இந்த மோதிரம் பிறந்தநாள் பரிசு மோதிரமாக மட்டுமின்றி நிச்சயதார்த்த மோதிரமாகவும் கருதப்படுவதாக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து விஷ்ணு விஷாலின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web