ஜெயம் ரவியின் ‘பூமி’ கதை திருட்டுக்கதையா? கோலிவுட்டில் பரபரப்பு

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தனது மாமியார் மறைவு காரணமாக எழுத்தாளர் சங்க அலுவலகத்துக்கு வரவில்லை என்றும் அவர் வந்த பிறகு இந்த பஞ்சாயத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே இதே உதவி இயக்குனர் ஜெயம் ரவியிடம் பூமியின் கதை குறித்து கூறியுள்ளதாகவும் அந்தக் கதையை கேட்ட ஜெயம் ரவி, இயக்குனர் லட்சுமணனை அழைத்து அவரிடம் இந்த கதையை சொல்லி பின் பூமி கதை உருவாக்கியதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜெயம் ரவி தரப்பில் இருந்து உதவி இயக்குநரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவியின் ‘கோமாளி’ மற்றும் ‘போகன்’ படங்களின் கதையும் இதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web