ரஜினிக்கு விருது கொடுத்ததற்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் தொடர்பா? மத்திய அமைச்சர் விளக்கம்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரையுலகினர், அரசியல்வாதிகள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தாதா சாகிப் பால்கே விருது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் காரணத்தால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டதாக ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்த செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன 

இந்த நிலையில் இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கும், ரஜினிக்கு பால்கே விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை அவர் கூறியுள்ளார் 

kamal rajini

இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்/ கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.


 

From around the web