இது ஜிம்னாஸ்டிக்கா, யோகாவா? ரகுல் ப்ரித்திசிங்கின் ரணகளமான புகைப்படம்

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடித்த என்ஜிகே, மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர்’ ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்
இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது யோகா செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான உடையில் அவர் யோகா செய்யும் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இது உண்மையிலேயே யோகாவா? அல்லது ஜிம்னாஸ்டிக்கா? என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
இருப்பினும் கேலிகளை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக தனது யோகா புகைப்படங்களை ரகுல் ப்ரித்திசிங் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரகுல் விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படம் வெளியானால், பாலிவுட் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்றும் கூறப்படுகிறது