ஷிவானிக்கும் பாலாவுக்கும் சண்டையா? என்னடா நடக்குது இங்கே?

 

பிக்பாஸ் வீட்டில் ஷிவானியும் பாலாஜியும் அவ்வப்போது செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சீரியசாக இதுவரை சண்டை போட்டுக்கொண்டது இல்லை. குறைந்தபட்சம் இருவரும் சேர்ந்து வேறொருவரிடம் கூட சண்டை போட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திடீரென ஷிவானி மற்றும் பாலா இடையே நேற்று சண்டை வந்தது  பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த வார கேப்டனாக இருக்கும் பாலாஜி கிச்சன் டீமில் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை அடுத்து கிச்சனில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக ஷிவானி அங்கு வந்தார் 

bala shivani fight

அப்போது டீ போடும் வேலையை பெற்றிருந்த கேபி, ஷிவானியி கப்களில் பால் ஊற்ற சொன்னார். ஷிவானி பாலை ஊற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த பாலாஜி, அதிகமாக ஊற்றாதே, எல்லோருக்கும் வேண்டும் என்று கூறியபோது இந்த வேலைக்கு பொறுப்பானவர் கேபி தான் அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது 

ஒரு கட்டத்தில் பாலாஜி கொஞ்சம் குரலை உயர்த்திப் பேச ஷிவானியும் எதிர்த்து பேசியதால் இருவருக்கும் சண்டை வந்தது. அதன் பின்னர் ஷிவானி கோபித்துக் கொண்டு கார்டன் ஏரியாவுக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து ஷிவானியை சமாதானப்படுத்த பாலாஜி வந்தபோதும் ஷிவானி சமாதானம் ஆகவில்லை

நீ திமிராக பேசினால் நானும் திமிராக தான் பேசுவேன் என்றும், நீ எப்படி நடந்து கொள்கிறாயோ அதுபோல்தான் எதிரில் உள்ளவர் நடந்து கொள்வார்கள் என்று கூறினார். அதன் பிறகு வழக்கம்போல பாலாஜி தன்னுடைய சாரியை கேட்டு ஷிவானியை சமாதானப்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானிக்கும் பாலாவுக்கும் வந்த முதல் சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web