மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின்?

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 

 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக கடந்த சீசனில் கலந்துகொண்ட கவின் பட்டியலில் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

கடந்த சீசனில் ஓட்டு போடும் மக்களோ அல்லது பிக்பாஸ் நிர்வாகமோ கவினை வெளியேறவில்லை. அவராகவே தானாக முன்வந்து வெளியேறினார். நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையிலும், பிக்பாஸ் கொடுக்கும் பணத்திற்காகவும் கவின் வெளியேறும் முடிவை எடுத்தார்

லாஸ்லியா சாண்டி உள்பட பலர் கவினிடம் போட்டியில் இருந்து வெளியேற வேண்டாம் என்று வற்புறுத்திய போதிலும் நண்பர்களுக்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக நான்காவது சீஸனிலும் கவின், பிக் பாஸ் போட்டியாளர் ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இருப்பினும் இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது அக்டோபர் பத்தாம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்படும் போதுதான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web