‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ ரீமேக்: சாந்தனு நடிக்கின்றாரா?

சூப்பர் ஹிட்டான பழைய திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவதும் அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் போதும் தமிழ் திரையுலகில் சகஜமாக நடந்து வரும் வழக்கம் தான் இந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படம் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் காதலித்தார்கள் என்றும் அதன் பின்னர் அவர்கள் தம்பதிகள் ஆனார்கள் என்றும் தெரிந்ததே எனவே
 

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ ரீமேக்: சாந்தனு நடிக்கின்றாரா?

சூப்பர் ஹிட்டான பழைய திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவதும் அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் போதும் தமிழ் திரையுலகில் சகஜமாக நடந்து வரும் வழக்கம் தான்

இந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படம் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் காதலித்தார்கள் என்றும் அதன் பின்னர் அவர்கள் தம்பதிகள் ஆனார்கள் என்றும் தெரிந்ததே

எனவே சென்டிமென்டாக பாக்கியராஜ்க்கு மிகவும் உணர்வுபூர்வமான படம் இது என்பதால் இந்த படத்தை அவர் ரீமேக் செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது

இந்த படத்தில் சாந்தனுவும் அவரது மனைவியும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் அவருக்கு பாக்யராஜ் பின்னால் இருந்து உதவி செய்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் ரீ-மேக் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web