தளபதி 65 திரைப்படம் கைமாறுகிறதா? பரபரப்பு தகவல் 

 

தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாக தெரிகிறது 

இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் ஒரு சிலர் இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து லைக்கா நிறுவனத்திற்கு மாற இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்களை தெரிவித்து வருகின்றனர் 

ஆனால் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் லைகா நிறுவனம் அப்படி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே லைக்கா நிறுவனம் இந்தியன் 2’, ‘பொன்னியின் செல்வன் உள்பட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்பதால் ’தளபதி 65’ படத்தை தயாரிக்கும் எண்ணமே அந்த நிறுவனத்திற்கு இல்லை என்றும் இது தேவையில்லாத வீண் வதந்தி என்றும் கூறப்படுகிறது 

அதுமட்டுமின்றி ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பின் போதே லைக்கா நிறுவனத்திற்கும் ஏஆர் முருகதாசுக்கும் இடையில் பிரச்சனை வந்ததாகவும் அதனால் மீண்டும் இருவரும் இணைந்து படம் தயாரிக்கும் வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது

From around the web