பாலாவின் வர்மா இவ்வளவு மோசமா? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

 

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ’வர்மா’ திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு 140 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது 

இதனை அடுத்து தற்போது இந்த படத்தை ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அர்ஜூன் ரெட்டி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை பார்த்துவிட்டு அதன் தமிழ் ரீமேக் ஆன ’ஆதித்ய வர்மா’ படத்தை பார்த்துவிட்டு பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே 

இருப்பினும் பாலாவின் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் ’வர்மா’ படம் பாலாவின் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை அப்படியே டப்பிங் செய்தது போல் பல காட்சிகள் இருந்ததாகவும், ஒரு சில காட்சிகள் தவிர எந்த காட்சியிலும் பெரிய மாற்றம் இல்லை என்றும் படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்

மேலும் இது பாலா படம் தானா என்பதே சந்தேகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால்தான் இந்த படத்தை பார்த்து அப்செட் ஆன விக்ரம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் என்றும் அவரது முடிவு சரியானதுதான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

பாலாவிடம் இருந்து இப்படி ஒரு மோசமான படம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web