ரூ.5 லட்சம் பணம் பெற்று போட்டியில் இருந்து விலகுகிறாரா ஆரி? வைரல் வீடியோ

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு ஆரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது போல் இன்றைய 2-வது பிரம்மா வீடியோவில் உள்ள காட்சிகள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பணம் பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஒருவர் வெளியேறுவார் என்பது தெரிந்ததே,. கடந்த சீசனில் ரூபாய் 5 லட்சம் பெற்று கவின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

aari five lakhs

அந்த வகையில் சற்று முன் வெளியான வீடியோவில் ரூபாய் 5 லட்சம் ஆப்ஷன் வைக்கும் பிக்பாஸ் இந்த ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியே செல்பவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார் 

இந்த அறிவிப்பை அடுத்து ரூ.5 லட்சம் கொண்ட பெட்டியின் அருகில் ஆரி செல்வதுடன் புரோமோ விடியோ முடிவடைகிறது. அப்படி என்றால் ஆரி, ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறாரா? என்று கேள்வி பார்வையாளர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

ஆரியின் கோடான கோடி ரசிகர்கள் அவர்தான் டைட்டில் வின்னர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆரி ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறுவாரா? அல்லது போட்டியில் நீடித்து டைட்டில் பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web