அரசியலுக்கு வருகிறாரா ஆரி? இரண்டு கட்சிகள் வளைக்க திட்டம்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஹீரோவாக மாறி இருக்கும் ஆரி வெளியே வந்தவுடன் அவருக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்று கூறப்படுகிறது 

குறிப்பாக தமிழகத்தில் இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவரை தங்களது காட்சிகளில் இணைக்க இரண்டு முக்கிய கட்சிகள் இப்போதே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

kamal

அதில் ஒன்றுதான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்றும் இன்னொன்று ஒரு பெரிய திராவிட கட்சி என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஆரி தரப்பினர்களுடன் இப்போதே பேசி வருவதாகவும் ஆரி வெளியே வந்தவுடன் அவரை தங்களது கட்சியில் இணைக்கவும், அவருக்கு எம்எல்ஏ சீட்டும் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது 

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரைப்பட வாய்ப்பு தான் கிடைக்கும் என்று அனைவரும் கருதுவர். ஆனால் வித்தியாசமாக ஆரிக்கு அரசியல் வாய்ப்பு கிடைத்து வருவது குறித்த செய்திகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

From around the web