இன்று வெளியேறுவது அர்ச்சனாவா? ஆஜித்தா? எதிர்பாராத தகவல் 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி, ஆஜித், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகிய ஏழு பேர்கள் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாளை ஒருவர் வெளியேற உள்ளார் 

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் இரண்டு பேர் வெளியேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் ஒருவர் மட்டுமே வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது 

archana

வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா மற்றும் ஆஜித் ஆகிய இருவருக்கும்தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் இந்த இருவரில் தற்போது வரை அர்ச்சனாவுக்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் இன்று மிஸ்டு கால் மூலம் வாக்குகள் போடலாம் என்ற அடிப்படையில் நூலிழையில் அர்ச்சனா தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் அர்ச்சனா தான் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று அவர் வெளியேறினால் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுகிறது

அன்பு குரூப்பின் தலைவியாக இருக்கும் அர்ச்சனா வெளியேறினால் அந்த குரூப்பில் உள்ளவர்கள் இனிமேலாவது தனித்தன்மையை காட்டி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web