’மாநாடு’ பாணியில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பா? படக்குழு மறுப்பு!

 

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வளர்ந்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படக்குழுவினர்களுக்கு ஏற்படாத வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே கபசுரக் குடிநீர் கொடுகப்படுவதாகவும் காலை மதியம் மாலை என மூன்று வேளையும் மருத்துவர் வீரபாகு தயாரித்துக் கொடுத்த கபசுரக் குடிநீர் படக்குழுவினர் அனைவருக்கும் அளிக்கப்படுவதும் தகவல்கள் வெளிவந்துள்ளன

annathe

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் ‘அண்ணாத்த’ படக்குழுவினர்களுக்கும், மாநாடு படக்குழுவினர் போலவே கபசுரக் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம் 

ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் அனைவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்களாம். முறைப்படி மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் இருந்தால் போதும், என்றும் கபசுரக் குடிநீர் போன்றவை தேவையில்லை என்றும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது 

எனவே மாநாடு பாணியில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்துவதற்காக அந்த படத்தின் குழுவினர் மறுப்பு தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web