இரண்டாகப் பிரிகிறதா ’அண்ணாத்த’ படக்குழு? படப்பிடிப்பு எப்போது?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படக்குழுவினர் இரண்டாக பிரிந்து பணிபுரிய உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்

annathe

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’அண்ணாத்த’ படப்பிடிப்பு தற்போது டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தை திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதற்காக படக்குழுவினர் இரண்டு பிரிவாக பிரிய இருக்கின்றதாம், ஒரு பிரிவினர் படப்பிடிப்பையும் இன்னொரு பிரிவினர் போஸ்ட் புரடொக்சன் பணியையும் ஒரே நேரத்தில் கவனிக்க இருப்பதாகவும் படப்பிடிப்பு நடக்க நடக்க போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது 
இதனால் ’அண்ணாத்த’ படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web