பாஜக உறுப்பினரா நடிகை ராகினி திவேதி? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ராகினி திவேதி பாஜக உறுப்பினர் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக தலைமை விளக்கம் அளித்துள்ளது 

இதுகுறித்து கர்நாடக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியதாவது: நடிகை ராகினி திவேதி பாஜகவின் உறுப்பினர் அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பல நட்சத்திரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக சொந்த விருப்பத்தின் பேரில் பிரச்சாரம் செய்தனர். அவர்களில் ஒருவராக ராகினி திவேதி இருக்கலாம். ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்யும்படி அவரை பாஜகவினர் கேட்டுக்கொள்ளவோ அல்லது பொறுப்பு எதுவும் அளிக்கப்படவோ இல்லை. அவரது விருப்பத்தின் பேரில்தான் பிரச்சாரம் செய்தார் 

இந்த நிலையில் அவரது சொந்த மற்றும் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பாஜக பொறுப்பேற்கவும், பதிலளிக்கவும் முடியாது. இதில் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக கர்நாடக பாஜக தலைவரின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

From around the web