அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறதா ரஜினியின் ‘2.0’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியான ரிலீஸ் தேதி என்று நவம்பர் 29ஆம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மேலும் தாமதம் ஆவதால் இந்த படம் திட்டமிட்டபடி நவம்பரில் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த படத்துடன் பூஜை போடப்பட்ட ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் மேலும் மேலும் தள்ளி போய்க்கொண்டே இருப்பது ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
‘2.0’ படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினி படமும் கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது.
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் உண்மை.