தமிழை போலவே தெலுங்கிலும் வசூலை அள்ளிய ‘இரும்புத்திரை

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை திரைப்படம் தமிழகத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.50 கோடி வசூல் செய்து விஷால் படங்களில் அதிகபட்ச வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் ஜூன் 1 முதல் இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான தெலுங்கு படங்களைவிட அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆந்திரா மற்றும்
 

தமிழை போலவே தெலுங்கிலும் வசூலை அள்ளிய ‘இரும்புத்திரை

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை திரைப்படம் தமிழகத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.50 கோடி வசூல் செய்து விஷால் படங்களில் அதிகபட்ச வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிலையில் ஜூன் 1 முதல் இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான தெலுங்கு படங்களைவிட அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழை போலவே தெலுங்கிலும் வசூலை அள்ளிய ‘இரும்புத்திரைஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து இந்த படம் ஒரே வாரத்தில் ரூ. 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இந்த படம் தெலுங்கிலும் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என நம்புகிறார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இதுவரை 60 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது என்று விநியோகிஸ்தர்கள் கூறுகின்றனர்.

விஷால், அர்ஜூன், சமந்தா ஆகிய மூவருமே தெலுங்கில் பிரபல நட்சத்திரங்கள் என்பதால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதாகவும், மேலும் இதில் கூறப்பட்ட டிஜிட்டல் குற்றம் தொடர்பான காட்சிகளுக்கு தெலுங்கு ஆடியன்ஸ் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

From around the web