பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த நான்கு போட்டியாளர்கள் அறிமுகம்!

 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாளராக ரியோ ராஜ் மற்றும் இரண்டாவது போட்டியாளராக சனம்ஷெட்டி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர் என்ற செய்தியை பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக நான்கு போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன் உட்பட பல படங்களில் நடித்த நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்து உள்ளார் 

அவரை அடுத்து நடிகர் பாலாஜி முருகதாஸ் அடுத்த போட்டியாளராகவும், அதன் பின்னர் அனிதா சம்பத் ஐந்தாவது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். அனிதா சம்பத், கடந்த சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியா போல் செய்தி வாசிப்பாளர் என்பதும் ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஷிவானி நாராயணன் ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டிலும் கவர்ச்சியில் அதிரடியாக கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்னும் 10 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் அவர்கள் யார் யார் என்பதை அவ்வப்போது பார்ப்போம்

From around the web