துருவ் விக்ரமின் 3வது படம் குறித்த தகவல்! மாரி செல்வராஜ் இயக்குகிறாரா?

 

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ’ஆதித்யா வர்மா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் தனது தந்தை விக்ரம் உடன் துருவ் விக்ரம் இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

இந்த நிலையில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள மூன்றாவது படம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தான் துருவ் விக்ரமின் மூன்றாவது படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது 
இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தை இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 சதவீதம் இருப்பதால் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் துருவ் விக்ரம் படத்தை இயக்க ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது

அதற்குள் துரு விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்து விடுவார் என்றும் தெரிகிறது. துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படம் அடுத்த ஆண்டு மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜின் பாணியில் இதுவும் ஒரு கிராமத்து கதை என்றும் துருவ் விக்ரம் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web