2 பாகங்களாக வெளியாகவுள்ள இந்தியன் 2!!

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அந்தக் காலகட்ட்த்திலேயே பல கோடி வசூலினைச் சந்தித்தது. இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில், இதன் இரண்டாம் பாகத்தினை ஷங்கர் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்
 
2 பாகங்களாக வெளியாகவுள்ள இந்தியன் 2!!

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான  படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அந்தக் காலகட்ட்த்திலேயே பல கோடி வசூலினைச் சந்தித்தது. இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில், இதன் இரண்டாம் பாகத்தினை ஷங்கர் எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். கமல்ஹாசன் பிக் பாஸ் 3 மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையே இப்படத்திற்கு கால்ஷிட் கொடுத்தார்.

2 பாகங்களாக வெளியாகவுள்ள இந்தியன் 2!!

சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியநிலையில், ஹைதராபாத், டெல்லி, ஆக்ரா, மும்பை, கர்நாடகா என இந்தியாவை ஒரு ரவுண்டு வந்துவிட்டார் ஷங்கர்.

 இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது, அந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்குள் போதும் போதும் என்றான நிலையில், தற்போது கொரோனாவால் இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகள் துவங்கியுள்ளது.
தற்போது எடிட் பண்ணாமல் படம் 5 மணி நேர அளவு இருப்பதால், படத்தை 2 பாகங்களாக வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

From around the web