இந்தியன் 2 பட விவகாரம் சமரசத்திற்கு வாய்ப்பில்லை! பேச்சுவார்த்தை தோல்வி!

இயக்குனர் சங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது!
 
இந்தியன் 2 பட விவகாரம் சமரசத்திற்கு வாய்ப்பில்லை! பேச்சுவார்த்தை தோல்வி!

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். இயக்குனர் ஷங்கர் ரஜினி கமல் விஜய் என்று பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் என்ற திரைப்படம் வசூல் சாதனையையும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று விட்டது. தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.lyca

இந்த லைக்கா நிறுவனத்திற்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே உடன் பாடின்றி காணப்பட்டது. அதனால் லைக்கா நிறுவனம் இயக்குனர் சங்கரை இந்தியன் 2 திரைப்படத்தினை இயக்கிய பின்னர் மற்ற படங்களை இயக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையேயான சமரச பேச்சுவார்த்தை தற்போது தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியன் திரைப்படத்தை முழுமையாக முடித்து தராமல் மற்றப் படங்களை இயக்க தடை கோரி லைக்கா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு வந்த போது இரு தரப்பும் பேசித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த சனிக்கிழமை இரண்டரை மணிநேரம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் சங்கர் தரப்பிலிருந்து ஜூன் மாதம் முதல் அக்டோபர் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சங்கர் தரப்பின் வாக்குறுதியை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இந்தியன் 2 படத்தை ஜூன் மாதத்துக்குள் முடித்து தர நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இயக்குனர் சங்கர் விளக்கத்தை கேட்காமல் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்கள். மேலும் இந்தியன் 2 பட வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

From around the web