இந்த குழந்தைகளுக்கு இதை எந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுப்பது? சேரனின் ஆதங்கம்

நீட் தேர்வு பயம் காரணமாக மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

நீட் தேர்வு பயம் காரணமாக மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ மற்றும் அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் சமீபத்தில் நீட்தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளது தமிழக மாணவ மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் படிப்பு என்பது மட்டும் வாழ்க்கை இல்லை என்று எந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது என்று ஆதங்கப்பட்டு இயக்குனர் சேரன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.

From around the web