பாட்சா வசனத்தை டுவீட் போட்ட சிஎஸ்கே வீரர்

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே அணியின் பவுலர்களான நிகிடி, தாக்கூர், பிராவோ ஆகியோர்களின் பங்கு பெரிதாக இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாக்கூர் தனது டுவிட்டரில் பாட்ஷா பட பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்து அசத்தியுள்ளார். ‘போட்டி உனக்கும் எனக்கும்தான். இந்த மாணிக் பாட்ஷாவுக்கும்
 

பாட்சா வசனத்தை டுவீட் போட்ட சிஎஸ்கே வீரர்நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே அணியின் பவுலர்களான நிகிடி, தாக்கூர், பிராவோ ஆகியோர்களின் பங்கு பெரிதாக இருந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாக்கூர் தனது டுவிட்டரில் பாட்ஷா பட பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

‘போட்டி உனக்கும் எனக்கும்தான். இந்த மாணிக் பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்கும்தான். தேவை இல்லாம கடைசியில இருக்குற டீம்கிட்ட உன் வீரத்தை காட்டாதே. முடிக்கிறேன். எண்ணி 2 நாள்ல்ல உன்னை முடிக்கிறேன் குவாலிஃபையர்ல்ல. ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. எடுடா வண்டியை போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.

இம்ரான் தாகூரின் இந்த டுவீட்டுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் மீண்டும் புத்துணர்ச்சியூடன் களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி, சாம்பியன் ஆக வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

From around the web