மூன்றாவது குழந்தை பெற்று கொண்டால் சிறை: கங்கனாவின் சர்ச்சை கருத்து

 
மூன்றாவது குழந்தை பெற்று கொண்டால் சிறை: கங்கனாவின் சர்ச்சை கருத்து

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் அந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

kangana


அமெரிக்கா உள்பட வளமான பல நாடுகளில் குறைவான மக்கள்தொகை இருப்பதால்தான் அந்நாட்டு மக்கள் வளமாக இருக்கிறார்கள் என்றும் ஆனால் இந்தியாவில் எத்தனையோ வளங்கள் இருந்தாலும் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் பெரும் சிரமத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

மக்கள் தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் தான் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார் என்றும் இங்கு தேர்தல் அரசியல் காரணமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை பெரும்பாலானோர் கண்டித்தும் ஒரு சிலர் பாராட்டியும் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web