நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட முக்கிய அறிக்கை!

 

தமிழ் திரையுலகில் காதலர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் இவர்களின் திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மிக அரிதான ஒரு நாள்தான்‌, ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம்‌ இருக்கும்‌ துறையை நினைத்து பெருமைகொள்ளும்‌ எண்ணம்‌ தோன்றும்‌. ௮ப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில்‌ இருந்த "கூழாங்கல்‌" எனும்‌ திரைப்படத்தைப்‌ பார்த்த போது தோன்றியது.

nayan viki

"கூழாங்கல்‌". பி.எஸ். வினோத்ராஜின்‌ முதல்‌ படம்‌. தலைப்பை போலவே படம்‌ மிக எளிமையாக இருந்தாலும்‌ ௮து எங்களுக்குள்‌ ஏற்படுத்திய தாக்கம்‌ ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புது குழுவினராலும்‌ நடிகர்களாலும்‌ இயக்குநராலும்‌ உருவான இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டுகளோடு மட்டும்  நிற்காமல்‌, தன்னுடைய பின்னணி இசையால்‌ கூழாங்கல்லின்‌ ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார்‌ திரு. யுவன்‌ ஷங்கர்‌ ராஜா.

"இப்படத்தின்‌ மூலமாக எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை, நம்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களிலும்‌ கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின்‌ முழு தயாரிப்பை பொறுப்பேற்றுள்ளோம்‌. உங்களுக்கும்‌ தாக்கத்தை ஏற்படுத்தும்‌ என்ற நம்பிக்கையில்‌ இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில்‌ நாங்கள்‌ பெருமை கொள்கிறோம்‌.

இவ்வாறு நயன்தாரா மற்றும்‌ விக்னேஷ்‌ சிவன்‌ ஆகியோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன்

From around the web