சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்!

 

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து தற்போது அவர் ’அரண்மனை 3’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே 

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஜ்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

aranmanai 3

இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் 11 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் முதல் முறையாக சுந்தர் சி படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பணிபுரிந்துள்ளார் என்பதும்,  பிரம்மாண்டமான இந்த சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஆர்யா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் இந்த படத்தில் சம்ப, மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web