’த்ரிஷ்யம் 2’ டிரெய்லரில் முக்கிய அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள் 

 

மோகன்லால் மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக ’த்ரிஷ்யம் 2’ படம் உருவாகி வந்தது என்பதும் மோகன்லால் மீனா உள்பட கிட்டத்தட்ட அதே படக்குழுவினர் நடித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

dryshyam2

இந்த நிலையில் இன்று ’த்ரிஷ்யம் 2’படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரைலரில் 
’த்ரிஷ்யம் 2’ படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

மிகப்பெரிய வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் ’ படத்தின் இரண்டாம் பாகத்தை திரையரங்குகளில் கண்டு ரசிக்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


 

From around the web