இமைக்கா நொடிகள்: திரைவிமர்சனம்

பெங்களூரு நகரில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு அந்த பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் சைக்கோ கொலையாளி அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அனுராக் பணத்தையும் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். இந்த அதிர்ச்சி மறையும் முன்பே மீண்டும் ஒரு மந்திரியின் மகனை கடத்தி அவரையும் பணத்தை வாங்கி கொண்டு கொலை செய்கிறார். இதுபோன்று
 
imaikka nodigal 12

இமைக்கா நொடிகள்: திரைவிமர்சனம்

பெங்களூரு நகரில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு அந்த பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் சைக்கோ கொலையாளி அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அனுராக் பணத்தையும் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். இந்த அதிர்ச்சி மறையும் முன்பே மீண்டும் ஒரு மந்திரியின் மகனை கடத்தி அவரையும் பணத்தை வாங்கி கொண்டு கொலை செய்கிறார்.

இதுபோன்று கொலைகள் செய்வது ருத்ரா என்று தெரிவிக்கின்றார். ஆனால் ருத்ரா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாராவால் என்கவுண்டர் செய்யப்பட்டவன். எப்படி ருத்ரா உயிருடன் வரமுடியும் என்ற குழப்பத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு கிடைக்கும் விடைதான் இந்த படத்தின் மீதிக்கதை

சிபிஐ அதிகாரி வேடத்தில் நயன்தாரா கச்சிதமாக பொருந்தினாலும் இந்த கேரக்டர் வலிமையாக உருவாக்கப்படாததால் அவரது நடிப்பிற்கு சரியான தீனி போடவில்லை. சிபிஐ அதிகாரியாக அவர் எடுக்கும் முடிவுகளும் புத்திசாலித்தனமாக இல்லாததால் நயன்தாராவுக்கு இந்த படம் இன்னொரு படம் என்ற எண்ணிக்கை மட்டுமே கிடைக்கின்றது. ஆனால் விஜய்சேதுபதியுடனான பிளாஷ்பேக் காட்சியில் நயன்தாரா மிளிர்கிறார்.

இமைக்கா நொடிகள்: திரைவிமர்சனம்நயன்தாராவின் தம்பியாக நடித்திருக்கும் அதர்வாவின் நடிப்பு ஓகே. ருத்ரா என்று தன்னையே போலீஸ் நினைத்தது ஏன்? என்று தனக்குள் கேள்வி கேட்டு தன்னுடைய பிரச்சனைக்கு காரணமான அனுராக் காஷ்யப்பை அவர் தேடும்போது நடிப்பில் பாஸ்மார்க் பெறுகிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இவருடன் நண்பராக வரும் ரமேஷ் திலக் ஓகே

வில்லத்தனத்தில் அனுராக் காஷ்யப் மிரட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் நிச்சயம் தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்பது உறுதி.

சிறப்பு தோற்றத்தில் சில நிம்டங்களே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவருடைய கேரக்டர்தான் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாவதால் இவருடைய கேரக்டர் மனதில் நிற்கிறது. அதேபோல் நயன்தாராவின் குழந்தையாக நடித்த சிறுமியின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது

டிமாண்டி காலனி என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த முறை கிரைம் திரில்லர் கதையை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் ஆனால் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். கிளைமாக்ஸில் நயன்தாராவை நெகட்டிவ் கதாபாத்திரமாக திடீரென மாற்றுவது திரைக்கதையில் பொருந்தவில்லை. சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத அனுராக்கை அதர்வா மிக எளிதில் கண்டுபிடிப்பது முழுக்க முழுக்க சினிமாத்தனம்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘இமைக்கா நொடிகள்’ இரண்டாம் பாதியின் திருப்பத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்

ரேட்டிங்: 2.5/5

From around the web