பிக்பாஸ் விமர்சனங்களை பற்றி நான் யோசிக்கவில்லை... ரம்யா பாண்டியன்
விமர்சனங்கள் பற்றி யோசிக்காமல் சந்தோஷமான விஷயங்களை கவனிக்க விரும்புகிறேன் என பேசியுள்ளார்.
Thu, 4 Feb 2021

பிக்பாஸ் 4வது சீசன் முடிந்து நாட்கள் ஆகிவிட்டன. போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் குறித்து நிறைய மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து முதன்முதலாக பேசியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்து மோசமான விமர்சனங்களை பார்க்கிறேன்.
அதைப்பார்த்து சோர்வு அடையவில்லை, ஆனால் இதுபற்றி கவலைப்படவில்லை, விமர்சனங்கள் பற்றி யோசிக்காமல் சந்தோஷமான விஷயங்களை கவனிக்க விரும்புகிறேன் என பேசியுள்ளார்.