கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை!

கொரோனா  தடுப்பூசி புகார் விவாகரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்  ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!
 
கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை!

மக்களுக்கு காமெடியோடு கருத்துக்களையும் கொடுப்பதுதான் தனது கடமையாக  பணியாற்றியிருந்தார் மறைந்த நடிகர் விவேக். மேலும் இவர்இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை மிகுந்த சோகத்தில் தள்ளினார். இந்நிலையில் இவரின் இறப்பின்போது பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பலரும் அவருக்கு அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல நடிகர் மன்சூர் அலிகான் அதன்பின்னர் செய்தியாளரை சந்தித்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

covid 19

மேலும் அவர் கொரோனா தடுப்பூசி குறித்தும் கருத்து கூறி இருந்ததால் அவர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான்  முன்ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.  இந்நிலையில் போலீசாரால் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளார், அதன்படி தடுப்பூசி போட வேண்டாம் என நான் சொல்லவில்லை என்றும் கூறினார்.

 மேலும் கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது என்றுதான் தான் சொன்னதாகவும் மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார். மேலும் நடிகர் விவேக் விவகாரத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது கூறப்பட்ட புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

From around the web