சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜாவின் புது ஸ்டுடியோ: இன்று முதல் பாடல் ஒலிப்பதிவு

 

இசைஞானி இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வந்த நிலையில் திடீரென பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அதன் காரணமாக இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இளையராஜா பாடல்களை ஒலிப்பதிவு செய்ய புதிய இடத்தை தேர்வு செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சென்னை கோடம்பாக்கம் எம்எம் பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புது ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ilaiyaraja

இன்று முதல் இந்த புது ஸ்டூடியோ இயங்க இருப்பதாகவும் இன்றைய முதல் நாளில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் பாடல் ஒன்று அங்கு ஒலிப்பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

மேலும் இளையராஜா அவர்கள் இனிமேல் இந்த இடத்தில் தான் அனைத்து பாடல்களையும் ஒளிப்பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது

From around the web