அப்பா இளையராஜா பாடலை நினைத்து மகன் யுவன் உருக்கம்

இளையராஜா இசையமைப்பில் கடந்த 17ம் தேதி வெளியான பாடல் சைக்கோ படத்தின் உன்ன நெனச்சு என்ற சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இந்த பாடல் வெளியான அன்றே பல லட்சம் பேர் பார்த்திருந்தனர். பாடலுக்காக வெளியான டிரெய்லரையே பல லட்சம் பேர் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இசை ஜாம்பவானாக 80, 90களில் அதிக ஹிட்களை கொடுத்த இளையராஜாவின் பாடல்களே இன்றும் அதிகம் பேர் விரும்பி கேட்கும் பாடலாக உள்ளது. டீக்கடைகள், ஹோட்டல்கள், கார், பஸ்கள் முதலியவற்றில் புதிய பாடல்களை
 

இளையராஜா இசையமைப்பில் கடந்த 17ம் தேதி வெளியான பாடல் சைக்கோ படத்தின் உன்ன நெனச்சு என்ற சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இந்த பாடல் வெளியான அன்றே பல லட்சம் பேர் பார்த்திருந்தனர். பாடலுக்காக வெளியான டிரெய்லரையே பல லட்சம் பேர் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பா இளையராஜா பாடலை நினைத்து மகன் யுவன் உருக்கம்

இசை ஜாம்பவானாக 80, 90களில் அதிக ஹிட்களை கொடுத்த இளையராஜாவின் பாடல்களே இன்றும் அதிகம் பேர் விரும்பி கேட்கும் பாடலாக உள்ளது.

டீக்கடைகள், ஹோட்டல்கள், கார், பஸ்கள் முதலியவற்றில் புதிய பாடல்களை விட இளையராஜாவின் பாடல்களே இன்றளவும் ஒலித்து கொண்டிருக்கிறது.

என்னதான் புதிய பாடல்கள் வந்தாலும் அவை இளையராஜாவின் உருக வைக்கும் பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதே விசயம்.

அதனால் இசையுலகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும் இந்த காலத்தில் வராது வந்த மழை போல் இசைஞானியின் இந்த பாடலால் பலருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்த பாடல் அவரின் மகன் இசையமைப்பாளர் யுவனையும் விட்டு வைக்கவில்லையாம். என் அப்பா இசையில் மொத்தமாக இந்த பாடலை நான் விரும்புகிறேன் அன்பு செலுத்துகிறேன் என யுவன் கூறியுள்ளார்.

From around the web