விஜய் ஆண்டனி இளையராஜா இணையும் படம்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன், எமன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில ஹீரோக்கள் ஒரே மாதிரி ஹீரோவாக நடிக்கிறோம் என நெகட்டிவ் ரோல்களில் நடிப்பார்கள். ஆனால் விஜய் ஆண்டனி அனைத்து படத்திலும் ஹீரோவாக நடித்தாலும் படத்தின் பெயர் நெகட்டிவாக இருக்குமாறு பார்த்து கொள்வார். தொடர்ந்து சொந்த படங்களாக தயாரித்து நடித்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி இப்போது முதன் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைகிறார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர்
 

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன், எமன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

விஜய் ஆண்டனி இளையராஜா இணையும் படம்

சில ஹீரோக்கள் ஒரே மாதிரி ஹீரோவாக நடிக்கிறோம் என நெகட்டிவ் ரோல்களில் நடிப்பார்கள். ஆனால் விஜய் ஆண்டனி அனைத்து படத்திலும் ஹீரோவாக நடித்தாலும் படத்தின் பெயர் நெகட்டிவாக இருக்குமாறு பார்த்து கொள்வார்.

தொடர்ந்து சொந்த படங்களாக தயாரித்து நடித்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி இப்போது முதன் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைகிறார்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர் ஒரு முறை விஜய் டிவியில் வாங்கிய விருதைக்கூட இளையராஜாவுக்கு சமர்ப்பித்தவர்.

இப்போது தமிழரசன் என்ற படத்தில் இளையராஜாவுடன் இணைய இருக்கிறார்.

இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

From around the web