பேட்ட படத்தின் பாடல் இளையராஜா பாடலின் உல்டாவா

அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள இளமை திரும்புதே பாடல் இளையராஜா இசையமைத்து வெற்றி பெற்ற ஹிந்தி படமான சத்மாவின் ஏய் ஜிந்தகி பாடலின் மெட்டு என சில சமூக வலைதளங்களில் இளையராஜா ரசிகர்கள் கூறி வருகின்றனர். கமல் நடித்த சத்மா திரைப்படம் ஹிந்தியில் நல்ல பெயரை கமல், இளையராஜா, பாலுமகேந்திராவுக்கு வாங்கி கொடுத்த படம். அதில் இடம்பெற்றது இந்த ஏய் ஜிந்தஹி பாடல். தமிழில் வந்த மூன்றாம் பிறையின் ஹிந்தி தழுவல்தான் சத்மா. தமிழில் வந்த
 

அனிருத் இசையமைத்துள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள இளமை திரும்புதே பாடல் இளையராஜா இசையமைத்து வெற்றி பெற்ற ஹிந்தி படமான சத்மாவின் ஏய் ஜிந்தகி பாடலின் மெட்டு என சில சமூக வலைதளங்களில் இளையராஜா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பேட்ட படத்தின் பாடல் இளையராஜா பாடலின் உல்டாவா

கமல் நடித்த சத்மா திரைப்படம் ஹிந்தியில் நல்ல பெயரை கமல், இளையராஜா, பாலுமகேந்திராவுக்கு வாங்கி கொடுத்த படம். அதில் இடம்பெற்றது இந்த ஏய் ஜிந்தஹி பாடல்.

தமிழில் வந்த மூன்றாம் பிறையின் ஹிந்தி தழுவல்தான் சத்மா. தமிழில் வந்த மூன்றாம் பிறையில் இந்த பாடல் இல்லை. சில வருடங்கள் கழித்து வந்த தம்பிக்கு எந்த ஊரு படத்திலேயே இந்த மெட்டில அமைந்த பாடலை இளையராஜா சேர்த்திருப்பார்.

என் வாழ்விலே வரும் அன்பே வா என தொடங்கும் இந்த பாடல் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும். இதிலும் ரஜினிகாந்த் தான் ஹீரோ என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது வெளியாகியுள்ள பேட்ட படத்திலும் இப்படியான மெட்டில் இளமை திரும்புதே பாடலை அனிருத் உருவாக்கியுள்ளதாக இளையராஜாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

From around the web