இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்களை கேட்க கால அவகாசம் எடுத்துக்கொண்டாலே இந்த ஒரு யுகம் போதாது. அத்தனையும் தேன் சொட்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும். இவர் இசையமைத்து கேசட்டில் மட்டும் வெளியாகி படங்களில் வராத ஒரு சில சூப்பர் ஹிட் பாடல்களை பற்றி பார்ப்போம். நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம். ஜானகியம்மாவின் குரலில் வந்த பாடல் இளையராஜா ரசிகர்களால் இன்று வரை விரும்பி கேட்கப்படும் இந்த பாடல்
 

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்களை கேட்க கால அவகாசம் எடுத்துக்கொண்டாலே இந்த ஒரு யுகம் போதாது. அத்தனையும் தேன் சொட்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும்.

இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்

இவர் இசையமைத்து கேசட்டில் மட்டும் வெளியாகி படங்களில் வராத ஒரு சில சூப்பர் ஹிட் பாடல்களை பற்றி பார்ப்போம்.

நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம். ஜானகியம்மாவின் குரலில் வந்த பாடல் இளையராஜா ரசிகர்களால் இன்று வரை விரும்பி கேட்கப்படும் இந்த பாடல் கேசட்டை தவிர எதிலும் வரவில்லை. இருப்பினும் இப்பாடல் இளையராஜா ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது.

அதே போல் அலைகள் ஓய்வதில்லை படத்தின் கேசட்டில் இடம்பெற்ற புத்தம் புதுக்காலை பாடல் படத்தில் இடம்பெறவில்லை. இது பல வருடம் கழித்து மேகா படத்தில் அதே இளையராஜா இசையமைப்பிலேயே வேறு பாடகி குரலில் இடம்பெற்றது.முந்தைய பாடலை பாடி இருந்தவர் ஜானகியம்மா.

என் உயிர்த்தோழன் படத்தில் இளையராஜாவும் சித்ராவும் பாடிய மச்சி மன்னாரு பாடல் மிக புகழ்பெற்றது இதுவும் கேசட்டில் இடம்பெற்று படத்தில் இடம்பெறவில்லை.சென்னை பாஷையில் இளையராஜா பாடிய வித்தியாசமான பாடல் இது.

பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆன இளையராஜாவின் பல பாடல்கள் கேசட்டில் மட்டும் இடம்பெற்று படத்தில் இடம்பெறாதது பெரும்பாலும் பாரதிராஜாவின் படங்களில் மட்டுமே நடந்துள்ளது. கிழக்கே போகும் ரயில் படத்தின் மலர்களே நாதஸ்வரங்கள் பாடலையும் கூறலாம்.

மேற்சொன்ன படங்கள் அனைத்தும் பாரதிராஜாவின் படங்களே.

மிகவும் ஆழமாக டிஸ்கஸ் செய்து இந்த பாடல் வேண்டாம் என்று எடுத்து விடுகின்றனர்.

மணிப்பூர் மாமியார் படத்தில் இடம்பெற்ற ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே பாடல் சி.எஸ் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன் பாடி இருப்பார் இப்பாடலும் இடம்பெறவில்லை. ராஜாதிராஜாவின் உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா, வீரா படத்தில் இடம்பெற்ற பட்டுப்பூ பூ, திருமகள் உன் முகம் காண வேண்டும் உள்ளிட்ட பல ஹிட் பாடல்கள் கேசட்டில் இடம்பெற்று படத்தில் இடம்பெறவில்லை.

இதே போல் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத்தாமரையே பாடல் மிக அருமையான பாடல். படத்தில் இடம்பெறவில்லை. அதே போல் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஆடிப்பட்டம் தேடிச்சன்னல் விதை போட்டு பாடலும் மிக புகழ்பெற்றது. மனோ,சித்ரா குரலில் இனிமையான பாடல் இது. மிக இனிமையான பாடலான இப்பாடல் படத்தில் வராதது மிக வேதனையான விசயமாகும்.

வருஷம் 16 படத்தில் இடம்பெற்ற பாடல் கரையாத மனமும் உண்டோ பாடல் ஜேசுதாஸ், சித்ரா குரலில் வந்த அழகிய சாஸ்த்ரிய சங்கீத பாடல் இனிமையாக இருக்கும் இப்பாடல் வருஷம் 16 படத்தில் இடம்பெறவில்லை

சத்யராஜ் நடித்த அமைதிப்படையின் சொல்லி விடு வெள்ளி நிலவே பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட், பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ, டீக்கடைகள் என அனைத்திலும் இன்று வரை ஒலித்து கொண்டிருக்கும் இப்பாடல் படத்தில் இடம்பெறாதது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

அரண்மனைக்கிளி படத்தில் இடம்பெற்ற துணி மேலே காதல் குறியை போட்டு வைத்த மானே பாடலும்,ராமரை நினைக்கும் அனுமாரு என்ற பாடலும் படத்தில் இடம்பெற்றதில்லை.

இப்பாடலை வைத்தால் நன்றாக இருக்காதோ என்ற அடிப்படையில் அதை பட இயக்குனர்கள் ஆர்வக்கோளாறில் எடுத்து விடுகின்றனர். பிற்காலத்தில் அந்த பாடல் யாரும் எதிர்பாராத அளவுக்கு ஹிட் ஆகி விடுகிறது.

From around the web