இளையராஜாவை முதலில் ஸ்ரீதர் விரும்பவில்லை- சந்தானபாரதி

மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர். இவர் கல்யாணபரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். பழமையான இயக்குனரான இவரிடம் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தது இயக்குனர் பி. வாசுவும், இயக்குனர் சந்தானபாரதியுமாவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் பன்னீர் புஷ்பங்கள், மெல்ல பேசுங்கள் படத்தையும் இயக்கியுள்ளனர். இவர்கள் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளனர். 70களுக்கு பிறகு தனது படங்களில் இளையராஜாவின்
 

மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர். இவர் கல்யாணபரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். பழமையான இயக்குனரான இவரிடம் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தது இயக்குனர் பி. வாசுவும், இயக்குனர் சந்தானபாரதியுமாவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் பன்னீர் புஷ்பங்கள், மெல்ல பேசுங்கள் படத்தையும் இயக்கியுள்ளனர்.

இளையராஜாவை முதலில் ஸ்ரீதர் விரும்பவில்லை- சந்தானபாரதி

இவர்கள் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளனர். 70களுக்கு பிறகு தனது படங்களில் இளையராஜாவின் இசையையே வைத்துள்ளார் ஸ்ரீதர். இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னை தொடு, தந்து விட்டேன் என்னை என பல படங்களில் இளையராஜாவின் இசையே தொடர்ந்தது. ஆனால் முதன் முதலில் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் உதவி இயக்குனராக இருந்த சந்தானபாரதி, பி வாசு இருவரும் புதிதாக இளையராஜா என்று ஒருவர் வந்திருக்கிறார் அவரை இசையமைக்க செய்வோம் என கூறியதற்கு முதலில் இரண்டு பேரும் எழுந்து வெளியே போங்கய்யா என கூறிவிட்டாராம். நானும் எம்.எஸ்.வியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அவரைத்தான் வழக்கம்போல் இசையமைக்க செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தாராம். இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் சென்ற சந்தானபாரதி, பி. வாசு அதிர்ச்சி அடைந்தார்களாம். காரணம் மனதை மாற்றிக்கொண்டு இளையராஜாவையே புக் செய்து இரண்டு பாட்டு கம்போஸிங்கும் செய்து விட்டாராம் இயக்குனர் ஸ்ரீதர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்கள் இதை கூறியுள்ளனர்.

From around the web