கல்லூரி மாணவிகளின் பாடல் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

கொடுத்த வாக்கிற்கிணங்க கல்லூரி மாணவிகளின் ஆசையை விஜய் ஆண்டனி படத்தில் நிறைவேற்றி வைத்தார் இளையராஜாவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அந்த படத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் 9 பேரின் ஆசையை நிறைவேற்றி வைத்தார். இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் பல கல்லூரிகளில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
 

கொடுத்த வாக்கிற்கிணங்க கல்லூரி மாணவிகளின் ஆசையை விஜய் ஆண்டனி படத்தில் நிறைவேற்றி வைத்தார் இளையராஜாவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அந்த படத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் 9 பேரின் ஆசையை நிறைவேற்றி வைத்தார். 

கல்லூரி மாணவிகளின் பாடல் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் பல கல்லூரிகளில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார்.

அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்’ படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.

From around the web