ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் அரசியலுக்கு வரமாட்டேன்: ராகவா லாரன்ஸ்

 

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லையென்றால் அவரது கட்சியில் சேர மாட்டேன், அரசியலிலும் ஈடுபட மாட்டேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன் நான் ரஜினிகாந்த் அவர்கள் கட்சியில் சேர போவதாக கூறியவுடன் என்னுடைய நண்பர்கள் சிலர் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் இல்லையே, பின் எப்படி அவருடைய கட்சிக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று கேட்டுள்ளனர்

இதுகுறித்து நான் தற்போது ஒரு விளக்கம் அளிக்கிறேன். நான் மட்டுமல்ல அனைத்து ரஜினியின் ரசிகர்களும் அவர் தான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். சமீபத்தில் கூட நான் அவரிடம் தொலைபேசியில் பேசும்போது கூட நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். இதனை நான் தொடர்ந்து அவரை வலியுறுத்வேன். ஒருவேளை அவர் இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் அவரது கட்சியிலும் சேர மாட்டேன், அரசியலுக்கும் வரமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

நீங்க வந்தா நாங்க வருவோம், இப்ப இல்லை நான் வேற எப்போ? என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

From around the web