என்னை விட இளைய நபரை தான் திருமணம் செய்வேன்... ஷாக் கொடுத்த நடிகை....

கண்டிப்பாக என்னை விட இளைய வயது உடைய ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகை கவிதா ராதேஷ்யாம் தெரிவித்திருக்கிறார்
 

நடிகை கவிதா ராதேஷ்யாம் தம்முடைய ரிலேஷன்ஷிப் பற்றிய உண்மை தகவலை தற்போது பகிர்ந்திருக்கிறார். அத்துடன் தம்முடைய ரிலேஷன்ஷிப் தொடர்பான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் கோமாளி. நீண்ட வருடங்கள் கோமாவில் இருந்த ஒருவர் தற்போது மீண்டும் விழித்திருந்தால் அவருக்கு என்ன எல்லாம் புதிதாக தெரியும் என்பது பற்றிய ஒரு கற்பனை கதையாக உருவாக்கப் பட்டது தான் கோமாளி திரைப்படம்.  இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கவிதா ராதேஷ்யாம். அவ்வப்போது தமது சோசியல் மீடியாக்களில் இவர் ஆக்டிவாக இருப்பது உண்டு. குறிப்பாக தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களைக் கவரும் படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போதும் ஒரு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருந்த இவர் அந்த புகைப்படத்துடன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,  “நண்பர்களே நான் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. எனக்கு திருமணம், நிச்சயதார்த்தம் எதுவும் ஆகவில்லை. ஆனால் ரிலேஷன்ஷிப்பில்  நான் இருப்பதாகவும் திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்டவை நடந்து விட்டதாகவும் பலர் தவறான வதந்திகளை பரப்புகின்றனர். ஆகையால் அது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று காட்டமாகவும் கண்டிப்புடனும் தெரிவித்திருக்கிறார் கவிதா ராதேஷ்யாம். குறிப்பாக அந்தப் பதிவில், “ஒரு 5 வருடங்களுக்குப் பிறகு நான் எனது பார்ட்னருடன் செட்டில் ஆவதற்கு வாய்ப்பு உண்டு” என்று தெரிவித்திருந்த கவிதா ராதேஷ்யாம்,  “கண்டிப்பாக என்னை விட இளைய வயது உடைய ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன். எனவே உங்கள் கற்பனைக்கு என்னை பற்றிய கதைகளை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலை தம்முடைய இன்ஸ்டாகிராமில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டதுடன் சேர்த்து தமது பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

From around the web