சேரனுக்கு பதிலாக நான் வெளியே செல்கிறேன்- லாஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதுவும் பலரது எதிர்பார்ப்பு கவின்- லாஸ்லியா காதல் ஜோடியை ஜோடியாகவே வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான். நேற்றைய நிகழ்ச்சியில் தோன்றிய கமல் ஹாசன் தண்ணீர்ப் பிரச்சினைகள் குறித்தும், ஏரி, வாய்க்கால், குளம், கண்மாய் என்பதன் பெயர்க் காரணங்கள் குறித்து கூறினார். அடுத்து இந்த வாரம் எவிக்ஷன் துவக்கத்திலேயே அறிவிக்கப்படும் என்று கூறினார். முதலில்
 
சேரனுக்கு பதிலாக நான் வெளியே செல்கிறேன்- லாஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.  அதுவும் பலரது எதிர்பார்ப்பு கவின்- லாஸ்லியா காதல் ஜோடியை ஜோடியாகவே வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான்.

நேற்றைய நிகழ்ச்சியில் தோன்றிய கமல் ஹாசன் தண்ணீர்ப் பிரச்சினைகள் குறித்தும், ஏரி, வாய்க்கால், குளம், கண்மாய் என்பதன் பெயர்க் காரணங்கள் குறித்து கூறினார்.

சேரனுக்கு பதிலாக நான் வெளியே செல்கிறேன்- லாஸ்லியா

அடுத்து இந்த வாரம் எவிக்ஷன் துவக்கத்திலேயே அறிவிக்கப்படும் என்று கூறினார். முதலில் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று அறிவிப்போம் என்று கூற, பார்வையாளர்கள் ஷெரின் என்று கத்த ஆரம்பித்தனர்.

அடுத்து கமல் ஹாசன் ஷெரின் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். அடுத்து, வழக்கம்போல் கவின் காப்பாற்றப்பட்டார். அடுத்து உள்ள இருவரில் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க, கமல் ஹாசன் டபுள் எவிக்ஷன் கூட இருக்கலாம் என்பதுபோல் கூறினார்.

அடுத்து இவர்கள் இருவரும் ஒரு ரூமிற்கு அழைக்கப்பட்டனர், அங்கு வந்து காத்திருந்தவர்களுக்கு கமல் ஹாசன் அங்குள்ள கார்டை எடுத்துப் பார்க்க கூற, அதில் சேரன் பெயர் இருந்தது.

அப்போது லாஸ்லியா இவருக்கு பதிலாக நான் வெளியேறலாமா? என்று கேட்க, கமல் ஹாசன் மறுத்துவிட்டார். லாஸ்லியாவின் உள்ளே சென்று காதல் செய்வதை விடுத்து வெளியே செல்ல நினைப்பது ஏன்? என பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

From around the web