காலில் விழுந்து ஸாரி கேட்பேன்: கன்பெக்சன் அறையில் கதறிய கன்னுக்குட்டி!

 

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த 70 நாட்களில் இந்த வீட்டில் உங்களுடைய அனுபவம் என்ன? நீங்கள் வீட்டில் உள்ள யாரை மிஸ் செய்கிறீர்கள்? என்ற கேள்விகளை கேட்டு வருகிறார் 

ஷிவானி, ரியோ உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஏற்கனவே கன்பெக்சன் அறைக்கு வந்துள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா மற்றும் அர்ச்சனா கன்பெக்சன் அறைக்கு வந்தனர் 

அனிதா தன்னிடம் தனது கணவர் கோபப்பட வேண்டாம், அழுக வேண்டாம் என்ற இரண்டு முக்கிய விஷயங்களை சொல்லி அனுப்பியதாகவும் ஆனால் தான் இந்த வீட்டில் வந்ததிலிருந்து அதிகமாக கோபப்பட்டதும், அழுததும்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்றும் அதனால் எனது கணவர் கூறியதை நான் கேட்காமல் இருந்ததால் முதலில் எனது கணவரை பார்த்ததும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்

anitha

மேலும் தன்னால் ஒரு கட்டத்திற்கு மேல் அழாமலும், கோபப்படாமலும் இருக்க முடியவில்லை என்று அனிதா பிக்பாஸ் இடம் கூறினா.ர் ஆனால் அதே நேரத்தில் தன்னால் முடிந்தவரை நேர்மையாக விளையாடி வருவதாகவும் நான் நானாக இருந்து வருவதாகவும், அதனால் தனக்கு திருப்தி என்றும் அவர் கூறினார். கடைசியில் பிக்பாஸ் அனிதாவிடம், ‘நீங்கள் செல்லலாம் கன்னுக்குட்டி’ என்று கூறியது அனிதாவுக்கு மகிழ்ச்சியின் உச்சமாக இருந்தது

கன்பெக்சன் அறைக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுது கண்ணீர் விடும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் அர்ச்சனாவும் கன்பெக்சன் அறைக்கு வந்த போது தன்னுடைய குடும்பத்தை நினைத்து கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web