நானும் ஹீரோ ஆகணும்: ஏக்கத்துடன் கூறிய பாலாஜி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரியோ நடித்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தின் வீடியோ பாடல் ஒலிபரப்பானது. இந்த பாடல் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன்சங்கர் ராஜா இசையில் ரியோ நடிப்பில் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவான இந்த பாடலுக்கு சக போட்டியாளர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர் 

இந்த பாடல் ஒளிபரப்பு முடிந்ததும் பாலாஜி அனைவரின் முன் வந்து பேசினார். இன்று நான் இரண்டு பேர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய பாலாஜி,நீங்கள் ஏற்கனவே பல அனுபவங்களை பார்த்து விட்டீர்கள் என்றும், நான் இனிமேல் தான் பார்க்க வேண்டும் இது மாதிரி எனக்கும் யாராவது சான்ஸ் கிடைக்க வேண்டும் என்றும், வெளியே போனால் தான் நம்முடைய உண்மையான வாழ்க்கை என்னவென்று தெரியும் என்றும், இங்கே இருப்பது நிஜ வாழ்க்கை கிடையாது என்றும் தெரிவித்தார்.

balaji

மேலும் வெளியே போனபின் தான் நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது என்று பேசத் பலாஜி, தன்னுடைய பேச்சில் ரியோ போல் தானும் ஒரு ஹீரோவாக ஆகவேண்டும் என்ற ஏக்கம் இருந்தது தெரிந்தது 

பாலாஜி முதல் 50 நாட்கள் தந்திரமாக விளையாடினாலும் அடுத்து மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும் உள்ளது. எனவே அவர் வெளியே வந்தவுடன் ஹீரோவாக ஆனால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஹீரோவாக உருவெடுப்பார் என்றும், ரசிகர்கள் அவருடைய பேச்சுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் 

ஒருவேளை பாலாஜி டைட்டில் பட்டம் வென்றால் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குவிய வாய்ப்பிருப்பதாகவும் கண்டிப்பாக பாலாஜிக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web