அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன் துணை முதல்வர் ஓபிஎஸ்!

சின்ன கலைவாணர் விவேக் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று கூறும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!
 
அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன் துணை முதல்வர் ஓபிஎஸ்!

மக்களுக்கு  நடிப்போடு சமூக சிந்தனையும் கொண்டுவர வேண்டும் என்பதில் முழு மூச்சாக தனது சினிமா  வேலையில் பணியாற்றி வந்தவர் சின்ன கலைவாணர் நடிகர் விவேக். நடிகர் விவேக் ,நடிகர் ரஜினி முதல் தற்போது உள்ள ஹரிஷ் கல்யாண் வரை உள்ள பல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிப்பதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இருந்து தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

vivek

இந்நிலையில் இப்பேர்பட்ட நல்ல மனிதன் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் இன்று காலை மரணமடைந்தார். தற்போது இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் இன்று காலை முதலே ரசிகர்கள் நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் இவருடன் இருந்த பணியாற்றிய தருணங்களையும் பகிர்ந்தனர்.

தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான ஓபிஎஸ் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி சின்ன கலைவாணர் விவேக் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும் நகைச்சுவை மூலம் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர் தற்போது சோகத்தில் ஆழ்த்தி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாரத பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web