அடுத்த படத்தில் நடிக்க வைக்க நினைத்திருந்தேன் ஆனால்.வருந்தும் இயக்குனர்!

தனது அடுத்த படத்தில் தனது மகனின் தந்தையாக நடிக்க வைக்க நினைத்தேன் என்று வருந்தும் இயக்குனர் வி சேகர்!
 
அடுத்த படத்தில் நடிக்க வைக்க நினைத்திருந்தேன் ஆனால்.வருந்தும் இயக்குனர்!

மக்களுக்கு காமெடி மட்டுமே கொடுத்தால் போதும் என்று பல நடிகர்கள் மத்தியில் காமெடியோடு கருத்துக்களையும் கொடுப்பதுதான் முறை என்று தனது வாழ்நாளில் தனது திரைப்படங்கள் அனைத்திலும் கருத்துக்கள் கூடிய காமெடியை கொடுத்து இருந்தவர். மேலும் இவர் திரைப்படத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக  குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார் என்பதும் முக்கியமான ஒன்றுதான். மேலும் தமிழ்நாட்டில் இவர் கோடிக்கணக்கான மரங்களை நட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு பெற்றவர் நடிகர் விவேக்.

vivek

நடிகர் விவேக் தற்போது மரணமடைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி நேற்றைய தினம் அவர் மாரடைப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது மரணம் அடைந்து அனைவரையும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் பலரும் நேரில் வந்து வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர், அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகின்றனர் . மேலும் இயக்குநர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் சேகர் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறினார். அதன்படி நடிகர் விவேக்கின் இழப்பை என்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். மேலும் அவர் தான் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் தனது மகனின் தந்தையாக நடிக்கும் கதாபாத்திரத்தை அவருக்கு ஒதுக்கிய தாகவும் அவர் கூறினார்

From around the web