நான் கோபப்பட்டு இருக்கக்கூடாது: ஷிவானியிடம் புலம்பிய பாலாஜி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து நேற்று இரவு ஷிவானியிடம் பாலாஜி புலம்பிக் கொண்டிருந்த காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது

உச்சபட்ச கோபத்தையும் அராஜகத்தையும் காட்டிய பாலாஜி தற்போது நல்ல பிள்ளை போல் இருப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

balaji

நீ சொல்லும் பாயிண்டுகள் எல்லாம் சரிதான், ஆனால் நீ சொன்ன விதம் சரியில்லை என்று ஷிவானி பாலாஜியிடம் கூறியபோது அதனை ஏற்றுக்கொண்ட பாலாஜி, நான் கோபப்படாமல் பொறுமையாக இருந்து இருக்கலாம், தேவையில்லாமல் கோபப்பட்டுவிட்டேன். எனக்கு கோபம் வருவதற்காகவே அவர் சோம்பேறி என்று என்னை தூண்டிவிடும் வகையில் கூறினார் என்றும், அதனால் என்னால் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தான் கோபப்பட்டேன் என்றும் அதற்கு நான் பொறுமையாக இருந்து இருக்கலாம் என்றும் பாலாஜி கூறினார் 

இனி வரும் வாரங்களிலாவது ஆரியுடன் ஆத்திரம் அடையாமல் அறிவுடன் விளையாடுவாரா? ஆரி போல் புத்திசாலித்தனத்துடனும் தந்திரத்துடனும் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web