வாய் தவறி பேசிட்டேன்.. தப்புதான்: ஜாமின் கோரி நடிகை மீரா மிதுன் மனு!

 
meera

நடிகை மீராமிதுன் தான் வாய் தவறி பேசிவிட்டதாகவும் தனக்கு ஜாமின் வழங்கும்படியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். அவரை நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீராமிதுனுடன் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் போது வாய் தவறி பட்டியலினத்தவர் குறித்து பேசி விட்டதாகவும் தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் மீராமிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் 

இந்த மனு இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web