நான் தான் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கினேன்: எஸ்.ஏ.சந்திரசேகர்!

 

தளபதி விஜய் குறித்த அரசியல் தகவல்கள் கடந்த சில மணி நேரங்களாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது என்பதும் அவருக்கு எதிராக இருப்பவர்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் சரியான தீனி கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது 

முதலில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை அடுத்து திடீரென விஜய் தரப்பிலிருந்து அந்த தகவல் மறுக்கப்பட்டது. அதன் பின்னர் திடீரென அந்த இயக்கத்தை நான்தான் தொடங்கினேன் என்றும் நான்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தேன் என்றும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்

அதன்பின்னர் விஜய் ஒரு நீண்ட விளக்கத்தை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டு எனது தந்தையின் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அதில் தனது ரசிகர்கள் இணைய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது சந்திரசேகர் மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார். விஜய்யின் முதல் ரசிகனே நான் தான் என்றும், 1993 ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றத்தை நான்தான் தொடங்கினேன் என்றும், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக நான் மாற்றினேன் என்றும் கூறினார் 

ரசிகர்கள், தொண்டர்களுக்காக மட்டும் இயக்கம் இல்லாமல் மக்களுக்கானதாக மாற வேண்டும் என்பதற்காகவே நான் இந்த கட்சியை தொடங்கி இருப்பதாகவும் இந்த கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை என்று நானே சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றி அனைத்துக்கும் நானே காரணம் என்ற ரீதியில் எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web