பாலாவை பல தடவை ட்ரை பண்ணினேன், முடியல: கேபி விளக்கம்

 

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு அந்த வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். 

அதன்படி கேபிக்கு கூடிப் பிரியேல் என்ற வாக்கியம் வந்தபோது அவர் அதை பாலா மற்றும் ஷிவானிக்கு பொருந்தும் என்றும் குறிப்பிட்டார். இந்த வீட்டில் தான் முதன் முதலில் வந்த போது பாலாவுடன் தான் நெருக்கமாக இருந்தேன் என்றும் அதேபோல் ஷிவானியிடமும் நெருக்கமாக இருந்தேன் என்றும் இருவரிடமும் தனித்தனியாக நான் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென இருவரிடமும் உள்ள நெருக்கம் எனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கூறினார் 

gabi

அதன் பின்னர் பாலா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நெருக்கமாகிய பின் நான் தனிமைப் படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் பலமுறை நான் பாலாவிடம் நெருக்கமாக இருக்க ட்ரை பண்ணினேன் என்றும் ஆனால் முடியவில்லை என்றும் அதே போல் ஷிவானியிடமும் பலமுறை நான் விரும்பி நெருக்கமாக முயலும் போதும் அது நடக்கவில்லை என்றும் அது தனக்கு வருத்தம் தான் என்றும் கூறினார்

எனவே கூடிப் பிரியேல் என்ற வார்த்தை பாலாவுக்கும் ஷிவானிக்கும் பொருந்தும் என தான் கருதுவதாக கேபி தெரிவித்தார். கேபியின் இந்த கருத்துக்கு பாலா தரப்பில் இருந்து சரியான பதில் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web