அடுத்த படம் என்னவென்று எனக்கே தெரியாது: ஹிட் பட இயக்குனர்

 

 

கோலிவுட்டில் திரைப்படங்கள் வெளியாகும் எண்ணிக்கையை விட பல மடங்கு வதந்திகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

ஒவ்வொரு நாளும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் குறித்த வதந்திகள் வெளிவந்து அதன் பின்னர் அது வதந்திகள் என்று உறுதி செய்யப்படும். அந்த வகையில் தற்போது ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த  வதந்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன 

விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், கார்த்தி அல்லது சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் கடைசியாக சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவர்தான் என்றும் கூறப்பட்டது இதுகுறித்து முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தேசிங்கு பெரியசாமி தான் இயக்கும் அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கதை மட்டும் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்றும் கதை திரைக்கதையை முடித்தவுடன் அதில் நடிக்க கூடிய நடிகரை தான் தேர்வு செய்ய உள்ளதாக தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார் 

எனவே நான் இயக்கும் படம் குறித்து வெளிவரும் வதந்திகளை தயவு செய்து யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web