என்னுடைய எந்த படத்தின் இரண்டாம் பாகமும் கிடையாது: ஏஆர் முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் நேற்று வெளிவரவில்லை என்றாலும் மிக விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’துப்பாக்கி 2’ என வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் கலைபுலி எஸ் தாணு அவர்கள் அந்த டைட்டிலை கொடுக்க
 

என்னுடைய எந்த படத்தின் இரண்டாம் பாகமும் கிடையாது: ஏஆர் முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் நேற்று வெளிவரவில்லை என்றாலும் மிக விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’துப்பாக்கி 2’ என வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் கலைபுலி எஸ் தாணு அவர்கள் அந்த டைட்டிலை கொடுக்க மறுத்து விட்டதாகவும் ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவியது

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தன்னுடைய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா தனக்கு இல்லை என்றும், ஒவ்வொரு படத்தின் கதையும் அந்த படத்துடன் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்

மேலும் ’துப்பாக்கி 2’ என்ற டைட்டிலை தாங்கள் தேர்வு செய்யவில்லை என்றும் இது குறித்து வெளியான தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்

From around the web